திருவண்ணாமலை தீபத் திருவிழா: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Prasanth Karthick
புதன், 11 டிசம்பர் 2024 (17:51 IST)

திருவண்ணாமலையில் நடைபெறும் தீபத்திருவிழாவிற்கு செல்ல பக்தர்கள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து 3 நார்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

வரும் வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை தீபத்தை காண செல்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் சென்னை, தாம்பரம் மக்கள் சென்று வர தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று தினங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் சிறப்பு ரயில் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக மதியம் 2.45க்கு திருவண்ணாமலை சென்றடையும்

 

மறுமார்க்கமாக இரவு 10.25க்கு திருவண்ணாமலையில் புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 2.15 மணியளவில் தாம்பரம் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments