Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா: அண்ணாமலை வாழ்த்து

Advertiesment
annamalai

Siva

, வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (08:20 IST)
அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
கொங்கு மண்டல சிவாலயங்களில் முதன்மையானதும், முதலையால் விழுங்கப்பட்ட சிறுவனை, சுந்தரமூர்த்தி நாயனார், தேவாரப் பதிகம் பாடி மீட்ட திருத்தலமுமான, திருப்பூர் மாவட்டம் அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 
 
காசியின் ஒரு கிளையாகக் கருதப்படும் அவிநாசி, தட்சிண காசி என்றும் அழைக்கப்படுகிறது. காசி சிவபெருமானின் அருள், அவிநாசிலிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்ற பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்ற திருத்தலம். 
 
பிரம்மோற்சவ காலத்தின்போது மட்டுமே பூக்கும் இக்கோயிலின் தலவிருட்சமான பாதிரி மரம், மற்றுமொரு அதிசயம். 
 
மைசூர் மகாராஜா வம்சத்தை சேர்ந்தவர்கள்,  காசியில் பூஜை செய்த சிவலிங்கத்தைக் கொண்டு வந்து, அவிநாசியப்பர் திருக்கோவிலில் பூஜை செய்த பின்பு தான் மைசூர் அரண்மனைக்குச் சென்று ஆட்சிப் பொறுப்பேற்பார்கள் என்ற புகழும் இக்கோவிலுக்கு உண்டு.
 
கும்பாபிஷேகப் பெருவிழா சிறப்பாக நடந்தேறவும், அனைவரும் இறை அருள் பெறவும், வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகவும், எல்லாம் வல்ல அவிநாசியப்பர் அருள்புரியட்டும்.

 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: தடை செய்யப்பட்ட அமைப்புகள் ஊடுறுவலா?