Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11-ம் வகுப்பு பள்ளி மாணவி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

J.Durai
செவ்வாய், 5 மார்ச் 2024 (09:14 IST)
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வ.உ.சி தெருவை சேர்ந்த அப்துல் காதர் ஜெய்லானியின் மகன் மனாஃப் சுல்தான் (20) என்ற வாலிபர் 11-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார்.
 
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்குறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
 
போலீசார் விசாரணையில் 11-ம் வகுப்பு  பள்ளி மாணவி தாராபுரம் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி  மாணவியை கடத்திச் சென்றதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் காணாமல் போன 11-ம் வகுப்பு பள்ளி மாணவியை பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் தேடியும் கிடைக்காததால் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இந்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து  11-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற வாலிபர்  மனாஃப் சுல்தான் என்பது தெரியவந்தது.
 
இதை அடுத்து மனாஃப் சுல்தான் என்ற வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதை ஒப்புக்கொண்டார். 
 
இதனை அடுத்து
போக்சோ சட்டத்தில் மனாஃப் சுல்தான் என்ற இளைஞரை தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லம் தலைமையிலான போலீசார் இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவன் துடிக்க துடிக்கக் கொலை! வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூர மனைவி!

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

அடுத்த கட்டுரையில்
Show comments