தூக்கி வீசிய எடை மெஷினுக்கு பதிலாக புதிய மெஷின்; வீடியோ வைரலான நிலையில் காவல்துறை நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (13:42 IST)
திருப்பத்தூரில் பலசரக்கு கடையின் எடை மெஷினை தூக்கி எரிந்து காவலர் அத்துமீறிய வீடியோ வைரலான நிலையில் புதிய மெஷினை மாவட்ட எஸ்.பி நேரில் சென்று அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் கூட்ரோடு பகுதியில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் ராஜா. வழக்கம்போல கடையை அவர் திறந்து வைத்திருந்த நிலையில் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ரகுராமன் என்பவர், ராஜா கடையை திறந்து வைத்திருந்ததற்கு ஆவேசமாக பேசியதுடன் அங்கிருந்த எடை மெஷினையும் தூக்கி போட்டு உடைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட கடைக்காரரை நேரில் சென்று சந்தித்த மாவட்ட எஸ்.பி விஜயகுமார் புதிய எடை மெஷினை ராஜாவுக்கு வாங்கி கொடுத்துள்ளார். பிறகு பொதுமக்கள், வியாபாரிகளிடம் போலீஸார் கடுமையாக நடந்துக் கொள்ள கூடாது என்றும் அறுவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி கணக்கு தொடங்க பணம் கொடுக்கிறார்களா? மாணவ, மாணவிகளை குறிவைத்து மோசடி..!

அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர்கள் ஊழியர்கள் திடீர் மாயம்! பயங்கரவாதிகளுட்ன் தொடர்பா?

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments