Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் இல்லைனா அபராதம்; ரூல்ஸ் இல்லைனா சீல்! – திருநெல்வேலி போலீஸ் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (08:33 IST)
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி காவல்துறை கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்புகள் எதுவும் உறுதியாகாத நிலையில் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களிடையே மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி போன்றவை குறைந்து வரும் நிலையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் மாஸ்க் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும், கடைகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments