நெல்லை நாங்குநேரி அருகே காதலனுடன் சென்ற பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளைய சேர்ந்த கணினி வல்லுநர் ஒருவர் தனது காதலியுடன் மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது நாங்குநேரி அருகே ஜீயர்குளம் பகுதயில் சென்றுகொண்டிருந்தபோது மூன்று மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்தனர். காதலனைக் கட்டிப் போட்ட அந்த மர்ம கும்பல் இளம்பெண்ணை தனியிடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துளளது.
மேலும் காதலர்களிடம் இருந்து லேப்டாப், செல் போன்கள் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு 3 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.