Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஆச்சு திருமுருகன் காந்திக்கு? மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (12:53 IST)
உடல் நலக்குறைவு காரணமாக திருமுருகன் காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மே 17 இயக்கத்தின் ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிவிட்டு வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியபோது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு திருமுருகன் காந்தி பிரிவினையை உண்டாக்கும் விதத்தில் பேசியதாக அவர் மீது உபா பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சமீபத்தில் சென்னை எழும்பூர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி மீது பதியப்பட்ட உபா பிரிவு வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன் காந்திக்கு சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் உணவுக் குழாயில் பிரச்சனை இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி சிகிச்சைக்காக திருமுருகன் காந்தி இன்று அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள்  சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments