நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதியில் புலிகள் சுற்றித் திரிவதாகவும், புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை குடியிருப்பு பகுதிக்குள் புலி சுற்றித் திரிவதாக, பொதுமக்கள் கூறி வந்த நிலையில், நேற்று புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதர் ஒன்றின் அருகே, புலி 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் படுத்து கிடந்ததை மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துச் சென்றனர். இதையடுத்து, வனத்துறையினர் பட்டாசு வெடித்து புலியை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
புலி நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை மூலம் ஒன்பது கேமராக்கள் பொருத்தப்பட்டன. புலியின் நடமாட்டத்தால் குடியிருப்புவாசிகளும், தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் அச்சமடைந்துள்ளனர்.