வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது நமது கடமை என்றும் அழிய போகிற கட்சிதான் திமுக என்றும் குருமூர்த்தி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஒவ்வொரு ஆண்டும் துக்ளக் திருவிழா சென்னையில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு துக்ளக் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியபோது திமுக அழிய போகிற கட்சி என்றும் இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது நமது அனைவரின் கடமை என்றும் கூறினார்
மேலும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பழிவாங்கி இருக்கிறார்கள் என்றும் அதற்கு இந்த அரசு அவமானப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார். கொரோனா தொற்றை தமிழக அரசு சிறப்பாக எதிர்கொண்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரவு பகல் பாராது உழைத்தார் என்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று என்றும் துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசினார்
ஊழல் லஞ்சத்தில் ஈடுபடுவோருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருணை காட்டுகின்றனர் என்றும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகளில் பலர் யார் காலையோ பிடித்து பதவி வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
இந்து மதம் பற்றி முக ஸ்டாலின் பேச காரணம் இந்து மக்கள் வாக்கு வங்கி தான் என்றும் அடுத்த தேர்தலில் அவர் காவடி கூட எடுப்பார் என்றும் துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசியது பேசினார்