Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில்கள்: 26 முதல் முன்பதிவு தொடக்கம்

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (18:37 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து போக்குவரத்தும் படிப்படியாக தொடங்கி வருகின்றன. ஏற்கனவே பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்க தொடங்கியதை அடுத்து விரைவில் புறநகர் ரயில் சேவையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் சில சிறப்பு ரயில்கள் குறித்த தகவலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
அக்டோபர் 26ஆம் தேதி முதல் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்கள் இந்த ரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments