Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஸ்லீம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை?

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (19:52 IST)
முஸ்லீம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன 
 
தற்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கப்பட்டு விட்டு அந்த தொகுதிகள் எவை எவை என்பதை பிரித்துக் கொடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதற்கான ஒப்பந்தத்தை இரு கட்சி தலைவர்களும் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகள் எவை எவை ஒதுக்கப்பட்டு உள்ளன என்பது குறித்த தகவல் சற்று முன் வெளியாகி உள்ளது 
 
முஸ்லிம் லீக் கட்சியை கடையநல்லூர் வாணியம்பாடி மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது இந்த மூன்று தொகுதிகளிலும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் தாய்ப்பால் விற்பனை படுஜோர்..! அதிகாரிகள் அதிரடி சோதனை..!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் காவல் ஜூலை 3 வரை நீடிப்பு

295 இடங்களில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.! சோனியா காந்தி உறுதி..!!

இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய தடையா? மாலத்தீவு அதிபர் ஆலோசனை என தகவல்..!

பிரதமர் மோடியுடன் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு.. மத்திய அமைச்சரவையில் பங்கேற்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments