Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குமரி மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக போட்டி!

Advertiesment
குமரி மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக போட்டி!
, புதன், 10 மார்ச் 2021 (19:06 IST)
அதிமுக வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியான நிலையில் அந்த பட்டியல் இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவின் வேட்பாளர்கள் பரவலாக போட்டியிடும் நிலையில் குமரி மாவட்டத்தில் மட்டும் ஒரே ஒரு தொகுதியில் தான் அதிமுக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது என்பதும் மூன்று தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் அவர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கள்ளக்குறிச்சி தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் பிரபுவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு மீண்டும் சமீபத்தில் அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் அதிமுக மாநிலங்களவை எம்பி யாக இருக்கும் வைத்திலிங்கம், கேபி முனுசாமி ஆகியோருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேப்பஹல்லி தொகுதியில் கேபி முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார் என்பதும், பொள்ளாச்சி தொகுதியில் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை, ஓபிஎஸ் மகனுக்கும் சீட் இல்லை!