நடிகர் சங்கம் மீது 3 மோடி ஊழல் புகார் : விளக்கம் கொடுப்பாரா விஷால்?
நடிகர் சங்கம் மீது 3 மோடி ஊழல் புகார்
புதிய உறுப்பினர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் சங்கம் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணி வெற்றி பெற்றது. நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி பொருளாலராகவும், பொன் வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்பின், நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தி அதன் மூலம் வரும் நிதியை கொண்டு கட்டிடம் கட்ட நடிகர் சங்கம் முடிவெடுத்தது.
அதனையடுத்து கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நடிகர் சங்கம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தி முடித்தது.
ஆனால் அதிகப்படியான ரசிகர்கள் மைதானத்திற்கு வரவில்லை என்றும், எறக்குறைய அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியானது. ஆனால், நட்சத்திர கிரிக்கெட் வெற்றி பெற்றதாக நடிகர் சங்கம் சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சங்க உறுப்பினரான நடிகர் வாராகி, நடிகர் சங்கம் மீது பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறும்போது “ நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை. முந்தைய நிர்வாகத்தை விட இருமடங்கு ஊழல் அதிகரித்துள்ளது. நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரூ.3 கோடி ஊழல் நடந்துள்ளது. போட்டியை ஒளிபரப்பிய சன் டிவி ரூ.13 கோடி கொடுத்ததாக கூறினார்கள். தற்போது 7 கோடிதான் தந்ததாக பொய்க்கணக்கு எழுதியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
நடிகர் சங்கம் மீது இவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.