Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோப்புக்கு வேட்டு- பழனியப்பனுக்கு பெப்பே - ஜெயலலிதா அதிரடி

தோப்புக்கு வேட்டு- பழனியப்பனுக்கு பெப்பே - ஜெயலலிதா அதிரடி

Advertiesment
தோப்பு வெங்கடாச்சலம்
, ஞாயிறு, 22 மே 2016 (11:46 IST)
தமிழகத்தில் புதிய அமைச்சரவையில் மாஜி அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம் மற்றும் பழனியப்பனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அிதமுக தனித்துப் போட்டியிட்டு 134 தொகுதிகளை அள்ளி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
 
இந்த தேர்தலின் போது, கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட14 பேர் மீண்டும் வெற்றிக்கனியை பறித்தனர்.
 
ஆனால், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்தியலிங்கம், பா.வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் பி.மோகன் ஆகியோர் படுதோல்வி அடைந்தனர்.
 
இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற பழனியப்பன், பெருந்துறையில் வெற்றி பெற்ற தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோருக்கு புதிய   அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை, மாறாக மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவரும், அவர்களது ஆதரவாளர்களும் சோகத்தில் உள்ளனர்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமாதானம் ஆகாத மு.க.ஸ்டாலின்?