தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற தூத்துக்குடி அணியின், கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். இதை அடுத்து, தூத்துக்குடி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அபினவ் முகுந்த் 82 (52) ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். காந்தி 59(43) ரன்கள், தினேஷ் கார்த்திக் 55(26) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
இதை அடுத்து, 216 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுக்களை இழந்தது. கணேஷ் மூர்த்தி அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்நிலையில், 18.5 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 122 ரன்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.