Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சீமானின் கோபம் சரியானதே, ஆனால்”.. சர்ச்சை பேச்சு குறித்து திருமா

Arun Prasath
புதன், 16 அக்டோபர் 2019 (12:19 IST)
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது சரியே என்பது போல் பேசி சர்ச்சையை கிளப்பிய சிமான் குறித்து, திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விக்கிரவாண்டி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது சரி என்பது போல் பேசினார்.

இதனை தொடர்ந்து சீமான் மீது, தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைத்தல், வன்முறையை தூண்டுவது போல் பேசுதல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்து அதிமுகவினரும் காங்கிரஸாரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய அமைதிப்படைக்கு எதிரான சீமானின் கோபம் சரி தான், ஆனால் விடுதலை புலிகளின் நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்துகளை கூறும்போது சீமான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து தற்போது சீமான், அதிமுக அமைச்சர்கள் ”அலிபாபாவும் 40 திருடர்கள் போல” என மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments