Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தடவை சனிக்கிழமையே தடுப்பூசி முகாம்! – திட்டத்தில் மாற்றம்!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (11:03 IST)
கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பல லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று அடுத்த மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னதாக சனிக்கிழமையே மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “அசைவம், மது அருந்தியிருந்தால் தடுப்பூசி போடக்கூடாது என்ற வதந்தியை நம்பி பலர் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வர தயங்குகிறார்கள். அசைவ பிரியர்களுக்காக இந்த முறை சனிக்கிழமை முகாம் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments