Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது எங்கள் மூதாதையர்களின் அடையாளம்! – நடுகற்களை அருங்காட்சியகத்திற்கு தர மக்கள் எதிர்ப்பு!

Nadukal
, திங்கள், 11 டிசம்பர் 2023 (14:59 IST)
பழங்கால தொல்லியல் எச்சங்கள் மற்றும் நடுகற்களை மதுரை அலங்காநல்லூரில் அமையவுள்ள அருங்காட்சியத்திற்கு  எடுத்து செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு


 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வருகிறது.,குறிப்பாக 2000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள், தமிழி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள், இரும்பு தொழிற்சாலைகள் இருந்தற்கான அடையாளங்கள், 50க்கும் மேற்பட்ட நடுகற்கள், நடுகற்களில் வழக்கத்திற்கு மாறாக சுமார் 8 அடி உயரம் கொண்ட சிறப்பு வாய்ந்த நடுகற்கள் என பல கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நடுகற்கள் மற்றும் பானை ஓடுகள் மற்றும் தொல்லியல் எச்சங்களை மதுரை அலங்காநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியத்திற்கு எடுத்து செல்ல தொல்லியல் துறையினர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் எங்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற வரலாற்று எச்சங்களாக இந்த  நடுகற்கள் மற்றும் இரும்பு துகள்கள் காணப்படுகிறது என்றும், எங்கள் பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொள்ளவும், உசிலம்பட்டி பகுதியில் அருங்காட்சியகம் அமைத்து இவை அனைத்தையும் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் சூழலில் தற்போது மதுரையில் அமையவுள்ள அருங்காட்சியகத்திற்கு இந்த நடுகற்களை எடுத்து செல்ல விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருட்களை அந்த அந்த கிராமத்திலேயே நினைவு சின்னங்களாக அமைத்து பாதுக்காக்கவும், விரிவான அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க எதாவது எழுதுனா எங்களை விரட்டிடுவாங்க..! – பத்திரிக்கையாளர்களிடம் கெஞ்சிய கர்ப்பிணி பெண்!