Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக கூட்டணியிலிரிந்து பிரிய இதுதான் காரணம்..? – முதன்முறையாக மனம் திறந்த எடப்பாடியார்!

Edappadi Modi

Prasanth Karthick

, வியாழன், 8 பிப்ரவரி 2024 (15:18 IST)
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்த நிலையில் அதற்கான காரணம் குறித்து கட்சி பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.



நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் உள்ள மாநில, தேசிய கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால் இந்த பேச்சுக்கள் தொடங்கும் முன்னதாகவே முந்தைய நாடாளுமன்ற தேர்தல் முதலாக கூட்டணியில் இருந்து வந்த பாஜக – அதிமுக இடையே பிளவு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜகவின் தலைமையே எனவும் பேசிக் கொள்ளப்பட்டது.

தற்போது பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்த அதிமுக தன்னுடன் இணைந்துள்ள வேறு சில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. எனினும் கூட்டணி விலகல் குறித்த அடிப்படையான காரணத்தை அதிமுக பொதுசெயலாளரான எடப்பாடி பழனிசாமி பெரிதும் பேசாமலே இருந்து வந்தார்.


இந்நிலையில் தற்போது அதற்கான காரணம் குறித்து பேசிய அவர் “தேசிய அளவிலான கட்சிகளுடன் கூட்டணி வைக்கும்போது நம்முடைய மாநிலங்களின் பிரச்சினைகளை சொன்னால் அவர்கள் காது கொடுத்துக் கூட கேட்பது இல்லை. அதனால் மாநிலத்தின் நலன் பாதிக்கப்படுகிறது. நம் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவே கூட்டணியிலிருந்து விலகினோம்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக தமிழக பாஜக தலைமையுடனான மோதல்தான் காரணம் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது மாநில உரிமைகளை மத்தியில் பேச முடியவில்லை என குற்றம் சாட்டும் தொனியில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேலை நேரம் முடிந்து விட்டால் முதலாளி போனை அட்டெண்ட் பண்ண தேவையில்லை: புதிய சட்டம்