Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்படி பண்ணிட்டீங்களே மணி சார்? உயிரே க்ளைமேக்ஸ் இது இல்ல! - உண்மையை உடைத்த மனிஷா கொய்ராலா!

Advertiesment
Maniratnam

Prasanth Karthick

, வியாழன், 7 நவம்பர் 2024 (15:08 IST)

தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பெரும் வெற்றியாக அமைந்த உயிரே படத்தின் க்ளைமேக்ஸ் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா பேசியுள்ளார்.

 

 

மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து 1998ல் வெளியான படம் ‘தில் சே’ (Dil Se). இந்த படம் தமிழில் உயிரே என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. ஷாருக்கான், மனிஷா கொய்ராலா, ப்ரீத்தி ஜிந்தா நடித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அப்போதைய இளைஞர்களிடையே ‘தைய தையா’ தொடங்கி ‘என்னுயிரே ஆருயிரே’ வரை மொத்த ஆல்பமும் தமிழிலும், இந்தியிலும் பெரும் ஹிட் ஆனது.

 

இத்தனைக்கும் இந்த படத்தின் இறுதியில் நாயகன், நாயகி இருவரும் இறந்து விடும் சோகமான க்ளைமேக்ஸ்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 11 கோடி செலவில் எடுக்கப்பட்ட ‘உயிரே’ மொத்தமாக 28 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் குறித்த சுவாரஸ்யமான சம்பவத்தை மனிஷா கொய்ராலா சமீபத்தில் ஒரு நேர்க்காணலில் பகிர்ந்துள்ளார்.
 

 

அதில் அவர் “உயிரே படத்தின் முதல் ஸ்க்ரிப்டில் இரு கதாப்பாத்திரங்களுக்கும் இடையேயான காதல் மற்றும் காரணம் பெரிதாக இருந்தது. படம் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து எழுதப்பட்டிருந்த க்ளைமேக்ஸ் நாயகனும், நாயகியும் சாவது அல்ல.

 

அந்த இடத்தில் போராளியான அந்த நாயகி சாவதாகவும், அதை நாயகன் துயரத்துடன் ஏற்றுக் கொள்வதாகவும்தான் எழுதப்பட்டிருந்தது. எங்களுக்கும் அது சரி என்றே தோன்றியது. கடைசி நிமிடத்தில் அந்த காட்சிகளை தற்போது உள்ளதுபோல இருவரும் இறக்கும் காட்சியாக மாற்றியமைத்தார்கள்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்! அடுத்தடுத்து குறி வைக்கப்படும் ‘கான்’ நடிகர்கள்! - பாலிவுட்டில் அதிர்ச்சி!