திருவாரூர் தேர்தல் : இன்று மதியம் உயர் நீதிமன்றம் முக்கிய முடிவு

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (13:15 IST)
திருவாரூர் தேர்தல் குறித்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பிரசாத் முறையீடு செய்துள்ளார்.
திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்றம் இன்று மதியம் முடிவு செய்யும் என தகவல் வெளியாகிறது.
 
இன்று காலையில் மற்றொரு நீதிபதிகள் அமர்வு இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்திருந்தது. 
 
வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கஜாபுயல் தாக்குதலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருவாரூர் பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே  தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென தமிழக அரசு ,உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments