திருவள்ளுவர் சிலைக்கு விபூதி குங்குமம் வைத்த பாஜக வேட்பாளர்.. பெரும் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (12:31 IST)
திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அசுவத்ததாமன் திருவள்ளுவர் சிலைக்கு விபூதி, குங்குமம் இட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை உடுத்திய சில சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ள நிலையில் தற்போது திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அசுவத்ததாமன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது திருவள்ளுவர் சிலையை பார்த்ததும் இன்று அந்த சிலைக்கு நெற்றியில் திருநீறு பூசி குங்குமம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 
 
இதனை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பாரத மாதா கி ஜே என்று கோஷமிட்டதால் இது குறித்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. திருவள்ளுவருக்கு மத அடையாளம் பூசுவதாக பாஜக மீது ஏற்கனவே குற்றம் காட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது வேட்பாளர் அசுவத்ததாமன் திருவள்ளுவர் சிலைக்கு விபூதி குங்குமம் வைத்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி அண்ணாதுரை, அதிமுக சார்பில் கலியபெருமாள், பாஜக சார்பில் அசுவத்ததாமன் போட்டியிடுகின்றனர் என்பதும் இங்கு சமீபத்தில் தான் முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments