பங்குனி பவுர்ணமி மாற்றம் பங்குனி உத்திரம் ஆகியவை காரணமாக திருவண்ணாமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை அடுத்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று பௌர்ணமி மற்றும் பங்குனி உத்திரம் இணைந்து வந்ததை அடுத்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.
இந்த நிலையில் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வெளியே ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தேரடி வீதி, பெரிய தெரு மற்றும் ஒத்தவாடை தெரு ஆகிய பகுதிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் நேற்று வெயில் அதிகமாக அடித்ததால் பல பக்தர்கள் குடையுடன் வரிசையில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் நேற்று நடை திறக்கப்பட்டவுடன் மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது என்பதும் மகா தீபாரதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குனி உத்திர நட்சத்திரம் என்பதால் முருகன் சன்னதியில் உள்ள மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.