திருவள்ளூரில் விசாரணைக் கைதி மர்ம மரணம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

Siva
ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (13:43 IST)
திருவள்ளூரில் விசாரணைக் கைதி மர்ம மரணம் அடைந்த விவகாரத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: 
 
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
 
விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொம்மை முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடும் கண்டனம்.
 
பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு இந்த விடியா அரசின் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மொபைல் போன்கள் தேவைப்படாதா? மெட்டா அறிமுகம் செய்த ஏஐ கண்ணாடி..!

தொடர் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. 83,000க்கும் அதிகமாக சென்ற சென்செக்ஸ்..!

அமெரிக்க பெண் இந்தியாவில் எரித்துக் கொலை! கூலிப்படை செட் செய்த காதலன்! - அதிர்ச்சி சம்பவம்!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. மீண்டும் ரூ.82,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

காசா நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறுங்கள்:புதிய பாதையை திறந்த இஸ்ரேல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments