Publish Date: Tue, 07 Feb 2023 (16:02 IST)
Updated Date: Tue, 07 Feb 2023 (16:05 IST)
வாஸ்து படி வீட்டை இடித்து கட்ட முயன்ற 46 வயது நபர் பரிதாப பலி: திருவள்ளூரில் சோகம்..!
வாஸ்து படி வீட்டை இடித்து மாற்றி கட்ட முயன்ற திருவள்ளுவரை சேர்ந்த 46 வயது நபர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த காஞ்சிபாடி என்ற பகுதியை சேர்ந்த 46 வயது செல்வம் என்பவர் வாஸ்துபடி வீட்டை இடித்து மாற்றி கட்ட முயன்றார். அப்போது அவரே வீட்டின் ஒரு பகுதியை இடித்து கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை இடிந்து அவரது தலையில் விழுந்தது.
இதனை அடுத்து படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வாஸ்துபடி ஒருவர் வீட்டின் ஒரு பகுதி இடித்ததால் பலியானது அவரது குடும்பத்தினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது