Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு கண்டுபிடித்த மருந்து இதுதான்? – திருத்தணிகாசலம் வாக்குமூலம்!

Webdunia
சனி, 16 மே 2020 (09:17 IST)
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறிய திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் என்ன மருந்து கொடுத்தார் என்பது குறித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக திருத்தணிகாச்சலம் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ வைரலானதை தொடர்ந்து சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறிய அவரை போலீஸார் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் முதலில் திருத்தணிகாசலம் சித்த வைத்தியத்தை முறையாக பயின்றவரா? அவரிடம் முறையான சான்றிதழ்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேசமயம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக திருத்தணிகாசலம் கூறிய நிலையில் யாராவது அந்த மருந்தை வாங்க வந்தார்களா? எதை மருந்தாக கொடுத்தார் எனவும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவர் தான் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றை அளித்ததாக கூறியுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமதாஸ் தொலைபேசி ஹேக்? அன்புமணி காரணமா? - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடக்கம் எப்போது? புதிய தகவல்!

நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

திடீரென உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75,000ஐ நெருங்கியதால் அதிர்ச்சி..!

அத்வானியின் சாதனையை முறியடித்த அமித் ஷா.. உள்துறை அமைச்சராக அதிக நாட்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments