Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருத்தணியில் மின்வெட்டு; வாக்களிக்க முடியாம திரும்பிய அதிமுக வேட்பாளர்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (10:11 IST)
திருத்தணியின் பல வாக்குச்சாவடிகளில் மின்தடை உள்ளிட்ட இடர்பாடுகளால் வாக்குப்பதிவு தாமதமாகும் நிலையில் அதிமுக வேட்பாளர் வாக்களிக்காமல் திரும்ப சென்றுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

திருத்தணியிலும் பல வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சில பகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது. அமிர்தபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க திருத்தணி அதிமுக வேட்பாளர் கோ.அரி சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் காத்திருந்த வேட்பாளர் திரும்ப சென்றுள்ளார். மேலும் பல பகுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திர கோளாறால் மக்கள் சிரமங்களை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments