Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ராஜினாமா?

Advertiesment
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ராஜினாமா?
, வெள்ளி, 20 அக்டோபர் 2017 (13:42 IST)
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு காரணமாக திருநாவுக்கரசர் பதவி விலக உள்ளதாகவும், அவருக்கு பதில் ப.சிதம்பரம் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கவுள்ளதாகவும் வதந்திகள் பரவின



 
 
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த திருநாவுக்கரசர், 'மரியாதை நிமித்தமாகவே, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்தேன் என்றும், நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என்றும் கூறினார்
 
மேலும் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர் என்பதற்கு உதாரணமே கேரள, பஞ்சாப் மாநில இடைத்தேர்தல் முடிவுகள் என்று கூறிய திருநாவுக்கரசர், 'மெர்சல்' படம் குறித்து தமிழிசையின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசை பாராட்டி மட்டுமே சினிமா எடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், நாட்டில் நிலவும் பிரச்னைகள் பற்றி சினிமாவில் காட்சி வடிவமைப்பது இயல்பு தான் என்றும் கூறினார்,.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் இன்னொரு முறை மன்னிப்பு கேட்பார்: பொன்.ராதாகிருஷ்ணன்