Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழுபேர் விடுதலை தவறான முன்னுதாரணமாகிவிடும் – திருநாவுக்கரசர் கருத்து !

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (12:01 IST)
ராஜீவ் காந்தி கொலையில் சம்மந்தப்பட்ட ஏழுபேரின் விடுதலைக் குறித்து தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தனது கருத்தைக் கூறியுள்ளார்.

1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அந்த குண்டு வெடிப்பில் அவரோடு சேர்த்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகிய ஏழுப் பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற தமிழக சட்டமன்றம் எடுத்த முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றது. இதையடுத்து அவர்கள் ஏழு பேரும் 27 ஆண்டுகளை சிறையில் வாழ்ந்துவிட்டதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகம் முழுவதிலும் இருந்து குரல்கள் எழுந்தன.

இதற்கிடையில் ராஜீவ் குண்டுவெடிப்பின் போது அவரோடு சேர்ந்து இறந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் குடும்பத்தார் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் எழுவர் விடுதலைக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கை நேற்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதனால் இப்போது ஆளுநரின் முடிவே இறுதியானது என்பதால் தமிழக மக்கள் அனைவரும் ஆளுநரின் முடிவுக்குக் காத்திருக்கின்றனர்.

ஏழு பேர் விடுதலைக் குறித்து தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ‘ ஏழு பேரைக் கருணை அடிப்படையில் விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாக இருக்கும். இதுவேக் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. ’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments