ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பல்வேறு அமைப்புகள் போராடி வரும் நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி முருகன், நளினி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
முருகன் கடந்த 12 நாட்களாகவும், நளினி 7 நாட்களாகவும் உண்ணாவிரதம் இருந்த நிலையில் தற்போது இருவரும் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். சிறைத்துறை அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை நளினி, முருகன் ஆகிய இருவரும் வாபஸ் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர்களை தேர்தல் அறிவிப்புக்கு முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழக கவர்னருக்கு இதுகுறித்து தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன