தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விரைவில் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் நடந்த புத்தக விழாவில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சரை நேரில் சந்தித்து பெஞ்சால் புயல் பாதிப்புக்கு நிவாரண நிதி வழங்க இருப்பதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் #விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. பத்து இலட்சம் வழங்கிட நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டுமாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி மாண்புமிகு முதலமைச்சரிடம் வழங்கப்படும்.