Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுவையில் ஆட்சி அமைக்க பாஜக சதி, திமுக தலையிட வேண்டும்: திருமாவளவன்

Advertiesment
புதுவையில் ஆட்சி அமைக்க பாஜக சதி, திமுக தலையிட வேண்டும்: திருமாவளவன்
, செவ்வாய், 11 மே 2021 (14:45 IST)
புதுவையில் ஆட்சி அமைக்க பாஜக சதி செய்வதாகவும் உடனடியாக இதில் திமுக தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
புதுச்சேரியில் ஆட்சி அமைக்க பாஜக சதி செய்கிறது என்றும் மக்கள் தீர்ப்புக்கு எதிராக ஜனநாயக படுகொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் எனவே திமுக உடனே தலையிட்டு ஜனநாயகத்தை காப்பாற்ற முன்வரவேண்டும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்
 
நட்புக்கும் துரோகமிழைக்கும் பாஜகவை தோளில் சுமக்கும் என்ஆர் காங்கிரஸ் இந்நிலையிலாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். புதுவையில் 10 என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏகளும் 6 பாஜக எம்எல்ஏக்களும் உள்ள நிலையில் நியமன உறுப்பினர்களாக மூன்று பாஜக எம்எல்ஏக்கள் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
 
மேலும் 6 சுயேச்சைகள் புதுவையில் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வருகிறது. இதனை அடுத்து திருமாவளவன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னுடைய புத்தகங்களை யாரும் வாங்க வேண்டாம்: தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கை!