திமுக தலைவர் ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். அப்போது இருவரும் இனிவரும் தேர்தல்களில் இடம் பெறவுள்ள கூட்டணி நிலவரம் குறித்து பேசியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஸ்டாலினை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
காங்கிரஸ், மதிமுக, வி.சி.க, ஆகிய கட்சிகள் திமுகவுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக உள்ளன. எங்கள் தோழமை கட்சிகள் சேர்ந்து மதச்சார்பற்ற நிலையில் கூட்டணியாகப் பணியாற்றுவதிலும் ஆர்வமுடன் உள்ளோம்.
சில நாட்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோழமை கட்சிளுடன் நட்பு உள்ளது என்பதற்காக தேர்தலில் கூட்டணி உள்ளது என்பது அர்த்தமில்லை என துரைமுருகன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைப்பற்றி திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது :
அன்று தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த அண்ணன் துரைமுருகன் மிகவும் எதார்த்தமான முறையில் பேசியுள்ளார்.
ஆனால் வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் இணைந்து: ஓரணியில் திரண்டு நிச்சயமாக வெற்றி பெறுவோம். மேலும் எங்கள் கட்சி சார்பில் நடைபெறும் மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயமாக கலந்து கொள்வார் இவ்வாறு அவர் கூறினார்.
துரைமுருகன் அன்று தோழமை கட்சிகளூடன் கூட்டணி இல்லை என்று பேசியது எதார்த்தம் என்று திருமாவளவன் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளார்களிடம் பேட்டி அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.