டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

Mahendran
சனி, 8 பிப்ரவரி 2025 (13:39 IST)
டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தங்களுடைய ஈகோவை கைவிட வேண்டும் என்றும் டெல்லி தேர்தல் முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, டெல்லி தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலையில் இருப்பது உண்மையாகவே அதிர்ச்சி அளிக்கிறது என்றும், ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால், அது தேசத்திற்கான பின்னடைவாக தான் பார்க்கப்படும் என்றும், நியாயமான முறையில் டெல்லியில் தேர்தல் நடந்திருக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை என்றும் கூறினார்.

இந்தியா கூட்டணி தலைவர்கள் இது குறித்து தீவிரமாக கலந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஈகோ பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்கான வழியை சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Edited by Mahendran

<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் கிளம்ப முடியாமல் தவிப்பு.. என்ன காரணம்?

பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள தெருநாய்களை அகற்றுங்கள்: கோர்ட் உத்தரவு..!

அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணம் இதுதான்: தமிழக அரசை விமர்சித்த சு வெங்கடேசன்..!

கலைஞர் கைது செய்யப்பட்ட போது ஸ்டாலின் தலைமறைவு ஆனாரா?.. நடந்தது என்ன?.....

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்த்தால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments