Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆதார் + வாக்காளர் அடையாள அட்டை - இணைப்புக்கு திருமா எதிர்ப்பு!!

Advertiesment
ஆதார் + வாக்காளர் அடையாள அட்டை - இணைப்புக்கு திருமா எதிர்ப்பு!!
, திங்கள், 20 டிசம்பர் 2021 (10:23 IST)
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் எனும் நிலை உள்ள நிலையில் தற்போது வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்க மத்திய முடிவு எடுத்துள்ளது. வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை மூலம் மின்னணு வாக்குப்பதிவு உள்ளிட்ட செயல்பாடுகளை அறிமுகம் செய்யவும் போலி வாக்காளர்களை களையவும் முடியும் என கூறப்பட்டது. 
 
ஆனால் இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சட்ட திருத்த மசோதாவை திமுக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்க வேண்டும்.  
 
மேலும், இது மிகவும் ஆபத்தானது. தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு வாக்களிக்க சிறுபான்மையினரை நீக்குவதற்கு இது ஏதுவாக அமைந்துவிடும். எனவே இது மிகவும் ஆபத்தான மசோதா, இதை அனைத்து கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!