Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதியை சந்தித்து உரையாடிய திருமாவளவன்....

கருணாநிதியை சந்தித்து உரையாடிய திருமாவளவன்....
, ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (11:21 IST)
திமுக தலைவர் கருணாநிதியை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து உரையாடினார்.


 

 
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே ஓய்வில் இருக்கிறார். அவரது தொண்டை வழியாக உணவு செல்வதற்காக குழாய் சொருகப்பட்டிருப்பதால் மற்றவர்களிடம் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வருகிற செப்டம்பர் 17ம் தேதி நடக்கவுள்ள மாநில சுயாட்சி மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக திருமாவளவன் சென்று கருணாநிதியின் வீட்டிற்கு சென்றார். அதன் பின் அவரிடம் சிறிது நேரம் உரையாடி விட்டு அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார். 
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமா.. திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.  அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றாலும் ஒரு 'மகத்தான ஆளுமையின்' உடல்நிலை குறித்து எனக்குள் நீங்காத ஒரு வலி இருக்கவே செய்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூன்று நாளாக உண்ணாவிரதம் ; ஜீவசமாதி அடையப் போகும் முருகன் ; சிறையில் பதட்டம்