Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழப்பவாதியாகும் ரஜினி... திருமா விமர்சனம்!

Advertiesment
குழப்பவாதியாகும் ரஜினி... திருமா விமர்சனம்!
, வியாழன், 3 டிசம்பர் 2020 (13:38 IST)
ரஜினியின் அரசியல் ஆரம்பம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இன்னும் ஒரு சில நாட்களில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அதன்படி சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தனது அரசியல் கட்சி தொடங்கும் தேதியை அறிவித்துள்ளார்.  
 
டிசம்பர் 31 ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் ஜனவரியில் கட்சி துவக்கம் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தான் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியிருந்தார் என்பதும், சரியாக மூன்று வருடங்கள் கழித்து அவர் தனது அரசியல் கட்சியை அறிவிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது, வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பெயர் பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அற்புதம் அதிசயம் நிகழும் என ரஜினிகாந்த் குறிப்பிட்டு உள்ளார். 
 
இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆன்மீகம் வேறு, அரசியல் வேறு. இரண்டையும் ஒன்றாக இணைப்பது குழப்பமான முயற்சி என ரஜினியை விமர்சித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்பூசி கிடைக்குமா? கிடைக்காதா? மத்திய அரசை சாடும் காங்!