Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்க என்ன பண்னி கிழிச்சீட்டீங்க!.. மோடியை அட்டாக் பண்ணும் திருமா!...

Advertiesment
thiruma

Mahendran

, சனி, 24 ஜனவரி 2026 (21:06 IST)
சமீபத்தில் சென்னைக்கு அடுத்துள்ள மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

திமுகவில் வாரிசு அரசியல் நடக்கிறது. ஒரு குடும்பத்திற்காகவே திமுக கட்சி செயல்படுகிறது.. மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.. இந்த ஆட்சி மாறவேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் போதை பொருட்கள் அதிகரித்து விட்டது.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. ஜால்ரா போடுபவர்கள்தான் திமுகவில் வளர முடியும்.. அவர்களுக்கு ஆமாம் சாமி போட்டால்தான் பதவி கிடைக்கும்’ என்றெல்லாம் பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள விடுதலை சிறுத்தை திருமாவளவன் ‘நான்கரை ஆண்டு திமுக ஆட்சியி விமர்சிக்கும் பிரதமர் மோடியை பார்த்து நான் கேட்கிறேன்.. 11 ஆண்டுகாலத்தில் என்ன செய்து கிழித்தீர்கள்.. ஒரு சவரன் தங்கம் ஒன்னேகால் லட்சம் போனதற்கு, உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்கு யார் பொறுப்பு?.. அதானிக்கும், அம்பானிக்கும் இந்தியாவை விற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.. எல்லாவற்றையும் முதலாளித்துவ மையம் ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. ஒருபுறம் கார்ப்பரேட் மையம், மற்றொருபுறம் சனாதன மையம்.. இதுதான் பாஜக ஆட்சி.

முஸ்லிம் வெறுப்பு, சிறுபான்மை மக்களுக்கான அச்சுறுத்தல், பாபர் மசூதி இடிப்பு, திருப்பரங்குன்றத்தில் மதவாத அரசியல்.. இதுதான் உங்கள் ஆட்சி.. நீங்கள் என்ன செய்து கிழித்துவிட்டீர்கள்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 நாட்கள் தூங்காமல் அழுதேன்!.. ஓப்பனாக பேசிய செங்கோட்டையன்!...