Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில்னா ஒரு நேர்மை வேண்டாமா? போலீஸிடம் சிக்கிய சில்வர் சீனிவாசன்

Webdunia
புதன், 9 மே 2018 (17:54 IST)
70 ஆண்டுகளாக திருடி தொழிலில் ஈடுபட்டும் வரும் சில்வர் சீனிவாசன் காவல்துறையினரிடம் தன்னை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

 
சென்னை மயிலாப்பூர் பகுதியில் நேற்ற்உ முன்தினம் சுற்றி திரிந்த ஒருவரை காவல்துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரிடம் விசாரித்ததில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை கலக்கி வரும் கொள்ளையர் சில்வர் சீனிவாசன் அவர்தான் என்பது தெரியவந்துள்ளது.
 
சில்வர் சீனிவாசன் தன்னை பற்றி போலீஸாரிடம் கூறியதாவது:-
 
14 வயதிலே திருட தொடங்கி விட்டேன். எங்கெங்கு திருடினேன் என்பதை டைரியில் எழுதி வைத்துக் கொள்வேன். போலீஸில் பிடிபட்டதும் மற்ற திருடர்களை போல கெஞ்ச மாட்டேன். குற்றத்தை ஒப்புக்கொள்வேன் என்று கூறியுள்ளார். மற்ற கொள்ளையர்களை போல மொத்தமாக திருடும் பழக்கம் இல்லை. ஒரே ஒரு செயினை எடுத்துக் கொண்டு தப்பி விடுவேன்.
 
நான் சாப்பிடும் சாப்பாட்டுக்கு இதுபோதும். திருடிய நகைகளை அடகு வைத்து அந்த பணத்தை செலவு செய்வேன். கையில் இருக்கும் காசு இருக்கும் பின்னரே அடுத்த திருட்டுக்கு செல்வேன் என்று கூறியுள்ளார். 
 
இதைக்கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
 
மேலும் இவர் ஆரம்பத்தில் சில்வர் பொருட்களையே அதிகமாக திருடியுள்ளார். இதனாலேயே இவர் சில்வர் சீனிவாசன் என்ற பெயரை பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments