Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - முதலமைச்சர்

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (17:00 IST)
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இதில் சபைகூடும் நாட்களில் நாள்தோறும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளிடையே விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாடி என்ற பாடலை சுட்டிக்காட்டி பேசினார்.
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள், அதிகரித்து வருவதையும்,  அதுசம்பந்தமாக வெள்யாகிம்  சிசிவிடி காட்சிகளை பார்க்கும் பெண்கள் அச்சப்படுவதாகவும் சபையில் தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமராமி. செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோடிக்கை வைத்தார்.
 
இதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் கூறியதாவது : குற்றசம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்கவும், செயின் பறிப்பு, கொலை, கொள்ளை குற்றங்களை தடுக்கவும் சென்னை முழுவது சுமார் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அதனை காவலர்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்ந்து கண்காணிப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று 58 ஆண்டுகளுக்கு முன்னரே எம்.ஜி.ஆர் பட பாடல் வரிகளிலேயே உலகிற்கு உணர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments