Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல்மின் நிலையம்: மின்வாரியம் தகவல்

Advertiesment
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல்மின் நிலையம்: மின்வாரியம் தகவல்
, புதன், 25 மே 2016 (05:12 IST)
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் புதிய அனல்மின் நிலையம் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக மின்வாரிய அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.


 

 
தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பூர், வளமாவூர், திருப்பாலைக்குடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 1,013 ஏக்கரில் ரூ.12,664.76 கோடி முதலீட்டில் 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார். 
 
இதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஆரம்பகட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தைத் தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமடைந்து உள்ளன. 
 
இதுகுறித்து மின்சாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
 
உப்பூர் அனல்மின் நிலையம் கடற்கரை அருகில்  அமைய இருப்பதால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 7 ஆண்டுகள் செல்லத்தக்க சான்றிதழும், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் 5 ஆண்டுகள் செல்லத்தக்க அனுமதி சான்றிதழும் வழங்கி உள்ளது.  
 
முதல்கட்டமாக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், அப்பகுதியில் கடல் நீர் பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்திய நாளில் இருந்து 4 முதல் 5 ஆண்டுகளில் மின்உற்பத்தி தொடங்கப்படும், என்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 யூனிட் இலவச மின்சாரம் ஏமாற்றும் திட்டம்: ராமதாஸ்