தமிழகத்தில் கொரோனா தொடர்பான பதற்றமான சூழல் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் சமீப காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளிலும் கொரோனா அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. இதனால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென சுகாதாரத்துறை வலியுறுத்தி வருகிறது.
வேளச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்:
98% மேலானவர்கள் தடுப்பூசி போட்டதால் மக்களுக்கு எதிர்ப்பு சக்தி கூடுதலாக உள்ளது. காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் மட்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் 3, 4 நாட்களில் குணமாகி வருகின்றனர் என்று தெரிவித்தார்.