Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராம்குமார் சாவிலும், ஜெயலலிதா சாவிலும் மர்மம்; கேட்க நாதியில்லை: டி.ராஜேந்தர்

Advertiesment
ராம்குமார் சாவிலும், ஜெயலலிதா சாவிலும் மர்மம்; கேட்க நாதியில்லை: டி.ராஜேந்தர்
, ஞாயிறு, 29 ஜனவரி 2017 (17:49 IST)
ராம்குமார் சாவில் மர்மம் உள்ளது என்று சொன்னாலும் கேட்பதற்கு நாதியில்லை, முன்னால் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பது என்று சொன்னாலும் அதை கேட்பற்கு நாதியில்லை என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.


 

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய டி.ராஜேந்தர், ”சென்னை மெரினா போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியது யார்? இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிலர் கெட்டபெயர் ஏற்படுத்த நினைக்கின்றனர்.

சென்னையில் நடந்த அறப்போராட்டத்தில் அரங்கேறிய திரைக்கதையை மாற்றியது யார்? திரைக்கு பின்னால் நின்று சூழ்ச்சி செய்தது யார்? சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே கட்டவிழ்க்கும் வன்முறை காட்சிகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்?

போராட்டத்திற்குள் புகுந்து தீயை கொளுத்திய அந்த தீய சக்திகள் யார் என்பது கண்டுபிடிக்க வேண்டும். ஏன் என்றால் நமது நாட்டில் சாதாரன ஒரு ஏழை குடும்பத்து மாணவன் ராம்குமார் சாவில் மர்மம் உள்ளது என்று சொன்னாலும் கேட்பதற்கு நாதியில்லை, முன்னால் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பது என்று சொன்னாலும் அதை கேட்பற்கு நாதியில்லை” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் 168 மில்லியன் செலவில் செயற்கை மழை