சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரொனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதன் முதல் மற்றும் இரண்டாம் அலைகள் தீவிர பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது 3 வது அலை பரவி வருகிறது, விரைவில் 4 வது அலை இந்தியாவில் தொடங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் கொரொனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு வரவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது. முகக்கவசம் அணிந்து பொதுவெளியில் செல்ல வேண்டும் எனவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு புதிய வகைக் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக தமிழகிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட இடங்களில் 100 பேரில் 3 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது எனவும் இதைப் பரவாமல் தடுக்க வேண்டியது நமது கடமை எனத் தெரிவித்துள்ளார்.