ஒமிக்ரான் கட்டுப்பாடுகள்; குற்றால அருவிகளில் குளிக்க தடை!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (08:42 IST)
தமிழகத்தில் ஒமிக்ரான் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வந்த நிலையில் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்புகள் 100ஐ எட்டியுள்ள நிலையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஒமிக்ரான் பாதிப்புள்ள பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் பலர் குற்றால அருவிக்கு வருவார்கள் என்பதால் கூட்டத்தை தவிர்க்க டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை அருவியில் குளிக்க தடை விதித்து தென்காசி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

ஒரு கப் டீயை விட மொபைல் டேட்டா விலை குறைவு: டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி

'ராகுல் காந்தியை சந்திக்க விஜய்க்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை': கே.எஸ். அழகிரி விளக்கம்

15 தொகுதிகள் இல்லையென்றால் போட்டியிட மாட்டோம்: பீகார் NDA கூட்டணியை மிரட்டும் கட்சி..!

அமீபா நோயால் 9 வயது சிறுமி மரணம்.. கோபத்தில் டாக்டரை அரிவாளால் வெட்டிய தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments