ஒரு நூறு ரூபாயாவது வெக்க கூடாதா.. மனக்குமுறலை எழுதி வைத்த திருடன்! – ஏலகிரியில் விநோத சம்பவம்!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (13:18 IST)
ஏலகிரியில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் திருட நுழைந்த திருடர்கள் அங்கு எதுவும் கிடைக்கவில்லை என எழுதிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக ஏலகிரி மலை மஞ்சம்கொள்ளை பகுதியில் உள்ள திமுக பொது செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஹார்ட் டிஸ்க் மற்றும் சிசிடிவி கேமராக்களை கழற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் பள்ளி தாளாளர் ஒருவருடைய கெஸ்ட் ஹவுஸிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். அந்த கெஸ்ட் ஹவுஸில் புகுந்த கொள்ளையர்கள் அங்கு திருட எதுவும் கிடைக்காததால் அங்கிருந்த சிசிடிவி கேமரா, டிவி உள்ளிட்டவற்றை திருடி சென்றதுடன், அங்குள்ள மது பாட்டிலை அங்கேயே அருந்திவிட்டு லிப்ஸ்டிக்கில் ”ஒரு நூறு ரூபாய் கூட வெக்க மாட்டீங்களா?” என்று எழுதிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை செயலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments