Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா பார்த்து திருட திட்டம்!: திருடிய பணத்தில் சினிமா தயாரிப்பு! – பலே கொள்ளையன் முருகனின் ஃபார்முலா

Webdunia
வெள்ளி, 4 அக்டோபர் 2019 (20:11 IST)
திருச்சி நகை கடை கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் சினிமாக்களை பார்த்து திருட திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையில் இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருச்சி அருகில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர்ம் கரூர் போன்ற பகுதிகளிலும் வாகனங்களில் பலத்த சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் திருவாரூர் விளமல் பாலம் வழியாக இரண்டு பேர் பைக்கில் சென்று கொண்டிருந்திருக்கின்றனர். அங்கு போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருப்பதை கண்ட அவர்கள் மூட்டையை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோட முயன்றிருக்கிறார்கள். துரத்தி சென்ற போலீஸார் மணிகண்டன் என்பவரை பிடித்தனர். அவனுடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் தப்பி தலைமறைவானான். பிறகு நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சுரேஷும் பிடிபட்டான்.

அவர்களிடமிருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் பிரபல கொள்ளையன் முருகனின் ஆட்கள் என்பது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பலப்பகுதிகளிலும் முருகன் தன் கைவரிசையை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொள்ளை திட்டத்தை ஹாலிவுட்டில் வெளியாகும் ஒரு இணைய தொடரை பார்த்தே திட்டமிட்டதாக அவர்கள் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கும் மேல் பெரிய அதிர்ச்சி முருகன் மற்றும் அவனது குழுவினர் ஏற்கனவே இதுபோல பல இடங்களில் திருடிய பணத்தை கொண்டு ஒரு படமும் தயாரித்துள்ளார்களாம். சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட முருகன் பண கொள்ளை தொடர்பான ஆங்கில சீரியல்கள் நிறைய பார்த்து இந்த திட்டத்தை தயாரித்ததாக கூறப்படுவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments