நிலப்பிரச்சினையால் தகராறு; துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் உரிமையாளர் கைது!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (13:36 IST)
பழனியில் நில விவகாரம் தொடர்பான பிரச்சினையில் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் வள்ளுவர் தியேட்டர் உள்ளது. இதன் உரிமையாளர் நடராஜன். இவருக்கும் பழனிசாமி மற்றும் சுப்பிரமணி என்ற இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று நடராஜனை எதிர்தரப்பினர் sஅந்தித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் தனது கை துப்பாக்கியால் பழனிசாமி மற்றும் சுப்பிரமணியை சுட்டுள்ளார். இதனால் காயமடைந்த சுப்பிரமணி மற்றும் பழனி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments