Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்ஸ்டாகிராம் மூலம் ஆல்கன் மக்களுக்கு உதவிய இளைஞர்...

இன்ஸ்டாகிராம் மூலம் ஆல்கன் மக்களுக்கு உதவிய இளைஞர்...
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (23:39 IST)
அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்ற பின் தனது தேர்தல் வாக்குறுதியின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளைத் திரும்பப் பெற்றார்.

அதனால் ஆப்கானில் தாலிபன்கள் அந்நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். எனவே மற்ற நாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கன் நிலைமை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைப்பான யுனிசெஃப் ”கடந்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகி வருகிறது. ஆப்கன் குழந்தைகள் பலர் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் அவர்களது கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் உள்ள குழந்தைகளும் ஆரோக்கியமான சுற்றுசூழலை இழந்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் சுமார் 7 மில்லியன் டாலர் நிதி திரட்டி ஆப்கன் மக்களைக் காப்பாற்றியுள்ளார்.

அதாவது, அமெரிக்க இளைஞர்,  இன்ஸ்டாகிராம் மூலம் சுமார் 7 மில்லியன் டாலர் வரை நிதி வசூலித்துக், ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த 350 பேரை பத்திரமாக மீட்டுள்ளார்.
மேலும், ஆபரேஅன் பிளேவே( operation flayway) என்ற திட்டத்தின் மூலம் தனியார் அமைப்புடன் கூட்டணி சேர்ந்து, ஆப்கன் மக்களை விமானம் மூலம் உகாண்டா அழைத்துச் செல்லப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவரை செருப்பால் அடித்த மனைவி