Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்பிள் ’ஐ ’போனுக்கு ஆப்பு வைத்த இளைஞர்...

ஆப்பிள் ’ஐ ’போனுக்கு ஆப்பு வைத்த இளைஞர்...
, சனி, 17 நவம்பர் 2018 (13:55 IST)
இன்றைய இளைஞர்களுக்கு வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறதோ இல்லையோ ஆனால் கட்டாயம் வீட்டில் பெற்றோரை அதட்டியாவது இல்லை எப்பாடு பட்டாவதும் ஆப்பிள் நிறுவத்தின் சிறந்த மாடலான ஐ போனை வாங்கி பந்தாவாக பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வேண்டுமென நினைக்கிறார்கள்.
காலம் எவ்வளவு தூரம் முன்னேறி உள்ளதோ அவ்வளவு தூரம் திருட்டும் வஞ்சகமும் அதிகரித்துள்ளது.
 
மேற்சொன்னதைப்போல ஆப்பிளின் ஐ போன் தொழில்நுட்பத்துக்கே  சவால் விடுவதாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்த   வெறும் எட்டாம் வகுப்பு படித்த அப்துல்ரஹ்மான்(26) என்ற இளைஞர் பிறரிடமிருந்து ஐ போனை பறித்த பின்  அதில் உள்ள சிம்கார்டை கழற்றி வேறு சிம்கார்டை போடும் போது போனில் உரிமையாளருக்கு செல்லும் குறுஞ்செய்தியின் மூலமாக ஐ போனின் பஸ்வேர்டை பெற்றுகொண்டு   அதை  புதிய போனாக மாற்றி நூதனமான முறையில் விற்று வந்துள்ளார்.
 
மேலும் போனை பறிகொடுத்த உரிமையாளர் தனக்கு போன் கிடைக்க வேண்டும் என்ற தவிப்பில் அவரது செல்லுக்கு வரும் குறுஞ்செய்தியில் கேட்கும் கேள்விக்கு ஐ போனுக்கு உரிய பாஸ்வேர்டை கொடுக்க இதை பயன்படுத்தி தான் ஏற்கனவே திருடிவைத்திருக்கும் போன்களை அப்துல்ரஹ்மான் தன் கடையில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளதை போலீஸார் தற்போது கண்டுபிடித்து அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இவரிடமிருந்து ஏராளமான ஐ போன்களும், பல ஸ்மார்ட் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 ரூபாய் கேட்ட போலீஸ்: கத்தியை காட்டிய இளைஞர்; அதிர்ந்துபோன காவலர்கள்